Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  27-02-2021

இன்றைய தியானம்(Tamil)  27-02-2021

வாடகை வீடு 

“...பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே,…” – அப். 28:30 

என்ன, வீடு கட்டியாச்சா? இன்னொரு நிலம் பதிவு பண்ணியாச்சா? என்ன கார் வைத்திருக்கீங்க? பிள்ளைகள் எதிர்காலத்திற்கு பணத்தை பேங்கில் Deposit -பண்ணியாச்சா? மகளுக்கு எவ்வளவு நகை செய்து வைத்திருக்கிறீர்கள்?... என்னங்க யோசிக்கிறீங்க, இதுதான் இன்றைக்குள்ள மனிதர்களின் உரையாடல். சொந்த வீடு, சொந்த நிலம் என்று இதைப் பற்றி மட்டுமே கவலையோடு இருக்கிறவர்கள் அநேகர். இதற்காக அவர்கள் எடுக்கும் பிரயாசமும் மிக மிக அதிகம். சொந்த வீடு கட்டுவதில் தவறில்லை. ஆனால் சிலருக்கு வீடு கட்டுவதே வாழ்வில் முக்கிய குறிக்கோளாய் மாறிவிடுகிறது. கெளரவத்திற்காக கடன் வாங்கி கட்டி நிம்மதியான வாழ்வை இழந்தவர்கள் ஏராளமானோர். அப்படியென்றால் வீடு, கார், நகை இவையெல்லாம் பாவமா? இல்லை! ஆனால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதே கேள்வி. 

பரிசுத்த வேதாகமத்தில் அப்போஸ்தலர் 13-28ம் அதிகாரம் வரையிலும் அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றி வாசிக்கிறோம். அவர் சீஷர்கள் எல்லாரிலும் அதிகமாய் பாடுபட்டவர், உபத்திரவப்பட்டவர், பிரயாசப்பட்டவர். தேவனுடைய ராஜ்யத்திற்காக ஓய்வின்றி அலைந்து திரிந்தவர். அவர் பிரயாணம் பண்ணின தூரங்கள் அதிகம். அவர் பார்த்த மனிதர்களும் ஏராளம். அவருக்கு உதவி செய்தவர்கள் அநேகர். ஆனாலும் மேற்கண்ட வசனத்தை வாசிக்கும் போது பவுல் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் என்பது நமக்கு தெரிகிறது. தனக்காக ஒரு சொந்த வீடு கூட வாங்காமல் வாடகை வீட்டில் இருந்துகொண்டு ஊழியம் செய்து கொண்டு வந்தார். அவர் நினைத்திருந்தால், எவ்வளவோ வசதிகளை தனக்கு சொந்தமாக கொண்டிருக்க முடியும். ஆனால், அவரோ எளிமையான வாழ்க்கை வாழ்ந்து நமக்கு முன்மாதிரியை வைத்து விட்டு போயிருக்கிறார். 

நண்பர்களே! பவுல் பார்க்காத பணமா? அவருக்கு இல்லாத பின்புலமா? இன்றைக்கு இருக்கிற ஊழியர்கள் எல்லாரையும் விடவும் பவுல் அன்றைக்கு வசதிபடைத்தவராக இருந்திருக்க முடியும். ஆனால் அவருக்கு தேவராஜ்ஜியத்தைக் குறித்து மட்டும்தான் கவலை. இன்றைக்கு நாமும் வீடு, சொத்து, பணம், நகை என இவைகளுக்காக வீணாக கவலைப்படுவதை விட்டு விட்டு பவுலைப் போல ஒரு எளிமையான வாழ்க்கையை வாழுவோம். அப்போஸ்தலர் புஸ்தகத்தின் கதாநாயகன் பவுல் ஒரு வாடகை வீட்டில் இருந்தார். என்னே! அருமையான ஒரு பாடம் நமக்கு! 
-    T. சங்கர்ராஜன் 

ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாநிலத்திலும் 500 தோழமை மிஷனெரிகளை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)